செயற்கை இதயத்தை உருவாக்கியுள்ள கான்பூர் ஐஐடி மருத்துவர்கள்

கான்பூர்: கான்பூர் ஐஐடி மருத்துவர்கள் செயற்கை இதயத்தை உருவாக்கியுள்ளனர். இதன் மூலம் இதய மாற்று அறுவை சிகிச்சைக்கான வாய்ப்புகள் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

சமீப காலமாக இதய நோய்கள் அதிகரித்து வருகின்றன. வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களால் சிறு வயதிலேயே இதய நோய்கள் ஏற்படுகின்றன.

இவை தவிர, கொரோனா போன்ற தொற்றுகளால் இதய நோய்களும் அதிகரித்து வருகின்றன. மாரடைப்பால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு உதவும் வகையில் கான்பூர் ஐஐடி மருத்துவர்கள் செயற்கை இதயத்தை உருவாக்கியுள்ளனர். இதன் மூலம் இதய மாற்று அறுவை சிகிச்சைக்கான வாய்ப்புகள் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

கேஜிஎம்யுவின் 118வது நிறுவன தினத்தில் கலந்து கொண்ட ஐஐடி கான்பூரின் இயக்குநர் பேராசிரியர் அபய் கரண்டிகர் இதனைத் தெரிவித்தார். அடுத்த ஆண்டு இது குறித்து மேலும் ஆழமான ஆய்வுகளை மேற்கொண்டு, அடுத்த இரண்டு ஆண்டுகளில் மனிதர்களுக்கு செயற்கை இதயம் பொருத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்றார்.

இந்த செயற்கை இதயம் மூலம் உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் முறையான ரத்த விநியோகம் செய்யப்படுவதாகவும், இந்த ஆராய்ச்சி வெற்றி பெற்றால் இதய மாற்று அறுவை சிகிச்சை எளிதாகும் என்றும் பேராசிரியர் அபய் கரண்டிகர் தெரிவித்தார்.