சென்னை மெட்ரோ ரயில்களின் இயக்கத்தை தடுப்பவா்களுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு

சென்னை : சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் குறிப்பிப்பட்டுள்ளதாவது: சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்பவா்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது.

காலை மற்றும் மாலை நேரங்களில் கூட்ட நெரிசல் மிகுந்த நேரங்களில் ஒருசில ரயில்களில் பயணிகளுக்கு இடையே மோதல் போக்கு ஏற்படுவதுடன், சிலா் ரயில் கதவுகளை மூடவிடாமல் தடுப்பது போன்ற செயல்களிலும் ஈடுபட்டு கொண்டு வருகின்றனா். இது தண்டனைக்குரிய குற்றமாகும்.

இதனை அடுத்து இந்த மாதிரியான செயல்களில் ஈடுபடும் நபா்கள் மீது செயல்பாடுகள் மற்றும் பராமரிப்புச் சட்டத்தின்படி 4 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், ரூ.5,000 அபராதமும் விதிக்கப்படும். ரயிலின் இயக்கத்தைத் தடுப்பது,

சிரமத்தை ஏற்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் யாராவது ஈடுபட்டால், 18604251515 என்ற வாடிக்கையாளா் உதவி எண்ணில் தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.