கர்நாடகாவில் வரும் 29-ம் தேதி முதல் ஊரடங்கு நேரம் மாற்றி அமைப்பு

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டபின் மக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், கொரோனா பரவல் அதிகரித்து கொண்டே செல்கிறது. கொரோனா பரிசோதனை அதிகரிப்பாலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது.

கர்நாடக மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. கர்நாடகத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக 918 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதால், அங்கு கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 11,923 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேற்று 11 பேர் கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளனர்.

கர்நாடகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை தற்போது 191 ஆக உயர்ந்துள்ளது. தற்போது கொரோனாவை கட்டுப்படுத்த கர்நாடக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதுகுறித்து முதல் மந்திரி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கர்நாடகாவில் இதுவரை ஊரடங்கு நேரம் இரவு 9 மணி முதல் காலை 5 மணிவரை இருந்தது. வரும் 29-ம் தேதி முதல் இரவு ஊரடங்கு 8 மணி முதல் காலை 5 மணிவரை மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வரும் ஜூலை 10-ம் தேதியில் இருந்து அனைத்து அரசு அலுவலகங்களும், அனைத்து சனிக்கிழமைகளிலும் மூடப்பட்டு இருக்கும் எனவும், வரும் ஜூலை 10-ம் தேதியில் இருந்து அனைத்து அரசு அலுவலகங்களும், அனைத்து சனிக்கிழமைகளிலும் மூடப்பட்டு இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.