தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று சற்று குறைந்துள்ளது

சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு படிப்படியாக உயர்ந்து வந்தது. இதனால் பொது இடங்களுக்கு செல்லும்போது பொதுமக்கள் கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

மேலும், தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரிப்பதன் காரணமாக அரசு மருத்துவமனைகளில் கொரோனா படுக்கைகளுக்கான வசதிகளும் மிக தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எனவே இதன் காரணமாக கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வருவதாகவும், 1 நாளைக்கு 500க்கும் குறைவாகவே கொரோனா பாதிப்பு ஏற்படுவதாகவும், மக்கள் இதனால் யாரும் அச்சப்பட தேவை இல்லை என்றும் அமைச்சர் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

ஆனால், கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தொடர்ந்து பொதுமக்கள் பின்பற்றப்பட வேண்டும் என்றும், பூஸ்டர் தடுப்பூசிகளை போட்டுக் கொள்ளும்படியும் அறிவுறுத்தி இருந்தார்.

அதனால், கொரோனா பாதிப்பை முழுமையாக முறியடிக்கும் வரை பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மத்திய மாநில அரசு சார்பில் கோரிக்கை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.