தமிழகத்தில் ஆவின் ஆரஞ்ச் பால் பாக்கெட் விலை லிட்டருக்கு இவ்வளவு உயர்ந்து இருக்கிறது

சென்னை: தமிழக அரசின் கீழ் மக்களுக்கு தரமான பால் வழங்கும் நோக்கில் ஆவின் நிறுவனம் இயங்கி கொண்டு வருகிறது. அந்த வகையில் நவம்பர் 5ம் தேதி முதல் ஆவின் பால் கொள்முதல் ரூ.44 ஆக உயர இருப்பதாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

பால்கூட்டுறவு அமைப்புகளின் முக்கிய நோக்கமே பால் உற்பத்தியாளர்களுக்கு நியாயமான கொள்முதல் விலையையும், பால் நுகர்வோர்களுக்கு தரமான பாலை நியாயமான விலையில் விற்பனை செய்ய வேண்டும் என்பதாகும்.

அதனால் பால் உற்பத்தியாளர்கள் பால்கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். இதையடுத்து இந்நிலையில் அவர்களின் கோரிக்கையை ஏற்று பசும்பால் கொள்முதல் விலை ரூ. 32 இருந்து ரூ. 35 ஆகவும், எருமைப்பால் கொள்முதல் விலை ரூ. 41லிருந்து, ரூ.44 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வானது 05.11.2022தேதியில் இருந்து அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் தமிழகத்தில் ஆவின் ஆரஞ்ச் பால் பாக்கெட் விலை லிட்டருக்கு ரூ.12 உயர்ந்து இருக்கிறது. மேலும் அட்டைதாரர்களுக்கு விலை மாற்றம் இன்றி ரூ.46க்கு ஒரு லிட்டர் பால் விற்பனை செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.