நடிகை சித்ரா வழக்கில் 2 அரசியல் தலைவர்களின் வாரிசுகள் பெயர் அடிபடுவதால் பரபரப்பு

அரசியல் வட்டாரத்தில் அனல்... சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில், இரண்டு பிரபல அரசியல் தலைவர்களின் வாரிசுகளின் பெயர்கள் அரசல்புரசாலக அடிபட்டு வருகிறது. இதனால், தமிழக அரசியல் வட்டாரத்தில் அனல் பறக்கிறது.

சின்னத்திரை நடிகை சித்ரா பூந்தமல்லி அருகே உள்ள ஒரு ஹோட்டலில் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சித்ரா பிரேத பரிசோதனையில், அவர் தற்கொலை செய்து கொண்டது உறுதி செய்யப்பட்டது.

ஆனால், சித்ரா தற்கொலைக்கு யார் காணம் என தமிழகம் முழுவதும் திரும்பிய திசை எல்லாம் விவாதம் நடந்தது. இதனிடையே, கடந்த ஜனவரி மாதம் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில் சித்ராவும், ஹேம்நாத்-ம் கடந்த அக்டோபர் மாதமே பதிவு திருமணம் செய்து கொண்டுள்ள தகவல்கள் வெளியானது.

சித்ராவின் தற்கொலைக்கு சித்ராவின் கணவர் ஹேம்நாத் தான் காரணம் என கூறி, அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனிடையே, சித்ராவுக்கு திருமணமாகி 2 மாதமே ஆனதால் சித்ராவின் தற்கொலை குறித்து ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

சித்ராவின் தாய்-தந்தை மற்றும் ஹேம்நாத்தின் தந்தை ரவிச்சந்திரன், தாய் வசந்தா ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில், சித்ரா தற்கொலை வழக்கில், அரசியல் பெரும் புள்ளிகளின் வாரிசுகள் இரண்டுபேர் சம்பந்தப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புத்தாண்டு இரவு கொண்டாட்டத்தில் கலந்துக் கொள்ள நடிகை சித்ராவைக் கட்டாயப்படுத்தி தொடர்ந்து தொந்தரவுப்படுத்தி வந்ததாக செய்திகள் வெளியே பரவ துவங்கியுள்ளது. அவர்கள் யார் என காவல்துறை கண்டறிந்து அவர்களையும் விசாரணை வளையத்தில் கொண்டு வரவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதனால், தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.