இலவச தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் அதிகரிப்பு; புதிய வசதிக்கு நடவடிக்கை

திருப்பதியில் இலவச தரிசனத்திற்கு பக்தர்கள் அதிகளவில் குவிவதால் டோக்கன் வழங்குவதில் புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவினால், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது. இதனால் பகத்தர்கள் தரிசனம் செய்ய முடியாமல் தவித்து வந்தனர்.

தற்போது ஊரடங்கு உத்தரவில்தளர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து திருப்பதி இலவச தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது அலிபிரியில் உள்ள பூதேவி காம்ப்ளக்சில் மட்டுமே இலவச தரிசன டோக்கன் வழங்கப்பட்டு வந்தது.

கொரோனா தொற்று பரவல் குறைந்து வருவதால், ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் வருகிறது. இதனால், பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு திருப்பதியில் உள்ள விஷ்ணு நிவாசம் விடுதியில் இன்று முதல் இலவச தரிசன டோக்கன் வழங்கப்பட உள்ளதாக திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.