அதிகரித்த பயணிகள் ,, வாரந்திர சிறப்பு ரயிலை ரயில்வே நிர்வாகம் இயக்கம்

இந்தியா: இந்தியாவில்ஒவ்வொரு நாளும், நாடு முழுவதும் உள்ள ஏராளமான மக்கள் ரயில் பயணங்களை மேற்கொள்கின்றனர். இருப்பினும் கொரோனா காலகட்டத்தில் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டதால் பெருமளவு மக்கள் அதிக சிரமத்திற்கு ஆளாகினர். ஆனால் தற்போது நிலை சீராகி, ரயில் சேவைகளில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் கர்நாடகாவில் இருந்து திருச்சி, மதுரை, ராமேஸ்வரம் போன்ற ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. குறிப்பாக ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இந்த வழித்தடங்களில் பயணிகள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக தென்மேற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

எனவே இதனால் இந்த வழித்தடங்களில் கூடுதல் சேவையை தொடங்க வேண்டும் என பயணிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை பரிசீலனை செய்த ரயில்வே நிர்வாகம் வாரந்திர சிறப்பு ரயிலை அறிமுகம் செய்துள்ளது.

அதன்படி, ஹூப்ளி சந்திப்பு(SSS HUBBALLI JN) முதல் ராமேஸ்வரம்(RAMESWARAM) வரை சனிக்கிழமை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அதேபோல், ராமேஸ்வரத்தில் இருந்து ஹூப்ளிக்கு ஞாயிற்றுக்கிழமை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
இந்த சிறப்பு ரயில் ஆகஸ்ட் 6-ம் தேதி (இன்று) முதல் ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய இரு மாதங்களுக்கு வாரந்தோறும் சனிக்கிழமை காலை 6.30 மணிக்கு புறப்படும்.
இந்த சிறப்பு ரயில்(07353) தேவநகரி, தும்கூரு, யஷ்வந்த்பூர் சந்திப்பு, ஓசூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, மன்னார்குடி, ராமநாதபுரம் வழியாக மறுநாள்(ஞாயிற்றுக்கிழமை) காலை 6.15 மணிக்கு சென்றடையும்.

மறுமார்க்கத்தில் ராமேஸ்வரம் – ஹூப்ளி வாராந்திர சிறப்பு கட்டண ரயில் (07354) ராமேஸ்வரத்தில் இருந்து ஆகஸ்ட் 7 (நாளை )முதல் செப்டம்பர் 25 வரை ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 09.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 07.25 மணிக்கு ஹூப்ளி சந்திப்பு சென்றடையும்.
இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டி, 3 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 9 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 5 இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது.