உலகிலேயே அதிகமான போக்குவரத்து நெரிசல் கொண்ட நகரின் பட்டியலில் இந்தியா 6வது இடம்

இந்தியா: உலகம் முழுவதும் மக்கள் தொகைக்கு ஏற்ப போக்குவரத்து நெரிசலும் அதிக அளவில் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், போக்குவரத்து நெரிசலை ஓரளவிற்கு கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு தொழில்நுட்பங்களுடன் சுரங்கச் சாலைகள் மற்றும் மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

எனினும், போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் உயர்ந்து வரும் வேளையில் தற்போது உலகத்திலேயே போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களில் பட்டியலை World Of Statistics அமைப்பு வெளியிட்டு உள்ளது.

இதையடுத்து இதில் முதலிடத்தில், ஆப்பிரிக்கன் நாட்டில் அமைந்து உள்ள லாகோஸ் மாகாணம் முதலிடத்தை பிடித்திருக்கிறது.இதற்கு அடுத்ததாக, அமெரிக்காவின் லோஸ் ஏஞ்சல்ஸ் நகரம், மூன்றாவதாக கலிபோர்னியாவின் சாஞ்சோஸ் மாகாணம், நான்காவதாக ஸ்ரீலங்கா நாட்டில் அமைந்துள்ள கொலம்போ நகரம் என பத்து நகரங்களின் பட்டியலை வெளியிட்டு உள்ளது .

இதனை அடுத்து இதில், இந்தியாவில் உலகிலேயே அதிக போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களின் பட்டியலில் டெல்லி 6-வது இடமும், கொல்கத்தா 8-வது இடமும், மும்பை 10-வது இடமும் பிடித்து உள்ளதாக World Of Statistics அறிவித்து உள்ளது.