காற்று மாசு விளைவின் காரணமாக இந்தியர்கள் தங்கள் ஆயுட்காலத்தில் 5.3 ஆண்டுகளை இழக்கின்றார்களாம்

சிகாகோ: காற்று மாசு விளைவால் ஆயுட்காலத்தில் 5.3 ஆண்டுகளை இழக்கும் இந்தியர்கள் .... காற்று மாசு விளைவின் காரணமாக இந்தியர்கள் சராசரியாக தங்கள் ஆயுட்காலத்தில் 5.3 ஆண்டுகளை இழப்பதாக ஆய்வு முடிவு ஒன்றில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. காற்று மாசினால் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ள உலக நாடுகளில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

அமெரிக்க நாட்டில் உள்ள சிகாகோ பல்கலைக்கழகத்தின் எனர்ஜி பாலிசி இன்ஸ்டிடியூட் சார்பில் அப்டேட் செய்யப்பட்ட Air Quality Life Index (AQLI) ஆய்வினை மேற்கொண்டு உள்ளது.

இதையடுத்து அதில்தான் இத்தகவல் தெரியவந்துள்ளது. இந்தியாவில் சுமார் 1.3 பில்லியன் மக்கள், உலக சுகாதார மையத்தின் காற்றின் தரத்தை கடந்து உள்ள பகுதிகளில் வசிப்பதாகவும் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வங்கதேசம், இந்தியா, நேபாளம், பாகிஸ்தான் மற்றும் மங்கோலியா ஆகிய நாடுகள் காற்று மாசு அதிகம் நிறைந்த நாடுகளில் முதல் 5 இடங்களில் உள்ளது. அதேபோல தலைநகர் டெல்லி, குருகிராம், ஃபரிதாபாத், ஜானுபூர் (உ.பி), லக்னோ, கான்பூர், பாட்னா ஆகிய நகரங்களில் காற்று மாசு அதிகம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.