வைகை அணைக்கு நீர்வரத்து 6158 கனஅடி .. 7574 கனஅடி நீர் வெளியேற்றம்

கூடலூர்: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் உள்ள 71 அடி உயரம் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் நேற்றுமுன்தினம் காலை 68.50 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று காலை 69 அடியாகவும், மதியம் 2 மணிக்கு 69.55 அடியாகவும் உயர்ந்தது. அணையின் நீர்மட்டம் 70 அடியை எட்டியதும் 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உபரிநீர் முழுவதும் வெளியேற்றப்படுவது வழக்கம்.

எனவே அதன்படி நேற்று இரவு அணையின் நீர்மட்டம் 70 அடியை எட்டியதும் அணைக்கு வந்த 7000 கனஅடிநீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது.இதனையடுத்து இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 70.01 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 6158 கனஅடியாக உள்ளது.

இதனால் அணையில் இருந்து 7574 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர் இருப்பு 5820 மி.கனஅடியாக உள்ளது. வைகை அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி உள்ளிட்ட 5 மாவட்ட வைகை கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து இது பற்றி அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கும் சுற்றறிக்கை பொதுப்பணித்துறை சார்பில் அனுப்பபட்டுள்ளது. வைகை கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.