பூண்டி ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது என்று தகவல்

பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது... ஆந்திர விவசாயிகளுக்கு தேவையான அளவு நீர் கிடைத்து விட்டதால், கிருஷ்ணா நதி கால்வாயில் ஆங்காங்கே உள்ள தண்ணீர் எடுத்து வந்ததை நிறுத்தி வருகின்றனர்.

இதனால் பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகமாக உள்ளது. நேற்று காலை தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை தாமரைக்குப்பம் ஜீரோ பாயிண்டிற்கு விநாடிக்கு 760 கனஅடியும், பூண்டி ஏரிக்கு 660 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3,231 மில்லியன் கனஅடி தண்ணீரை சேமித்து வைக்கலாம். நேற்று காலை 6 மணி நிலவரப்படி நீர்மட்டம் 34.67 அடியாக பதிவாகியது. 3 ஆயிரத்து 38 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு இருந்தது.

ஏரிக்கு மழை நீர் வினாடிக்கு 310 கனஅடியாக வந்து கொண்டிருந்தது. ஏரியிலிருந்து இணைப்பு கால்வாய் வழியாக புழல் ஏரிக்கு 242 கனஅடியும், செம்பரம்பாக்கம் ஏரிக்கு 200 கனஅடி தண்ணீரும் திறக்கப்படுகிறது.