வடகிழக்கு பருவமழை .. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள காதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவு


சென்னை:தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ளது. இந்த பருவ மழை காலங்களில் மக்களின் போக்குவரத்து, சுகாதாரம் மற்றும் அத்தியாவசிய தேவைகள் உள்ளிட்டவைகள் குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது வழக்கமான ஒன்று .

இந்த நிலையில் நடப்பு ஆண்டு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்துஅனைத்து மாவட்ட சுகாதாரத் துறை உதவி இயக்குனர்களுக்கும் பொது சுகாதாரத்துறை இயக்குனர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார்.

இதையடுத்து அதில் பருவமழை காலங்களில் மருத்துவ கட்டமைப்புகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.


மேலும் தொற்று நோய்களால் மற்றும் பூச்சிகளால் ஏற்படும் நோய்களை தடுப்பதற்காக தேவையான நடவடிக்கைகளை தயார் நிலையில் வைத்திருக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

எனவே தற்போது தமிழக அரசின் அனைத்து துறைகளும் பருவமழைக்கு முன் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள தொடங்கி உள்ளனர்.