போர்க்குற்றங்களை விசாரிப்பதா? சான்ஸே இல்லை என்கிறார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ

இலங்கையில் இராணுவத்தினருக்கு எதிராகப் போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைக்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

போர் வெற்றிவிழாவில் இராணுவ அதிகாரிக்கு பதவியுயர்வு வழங்கப்பட்டமை தொடர்பாக தி ஹிந்து நாளிதழில் வெளியான செய்தி குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

வழக்கு விசாரணைகள் இன்றி 14 ஆயிரத்து 500 விடுதலைப் புலிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கியுள்ள நிலையில் சுனில் ரத்நாயக்கவிற்கு பொதுமன்னிப்பு வழங்கியமை அநீதியானது அல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தனக்கு அரசியலமைப்பு சட்டத்தினால் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்தியே பொதுமன்னிப்பு வழங்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவிற்கு எதிராக போர்குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது தவறான விடயம் என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கூறியுள்ளார்.