எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அழைப்பு

சென்னை: தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


உலகின் மிகப்பெரிய பொருளாதார குழுவான ஜி20 அமைப்பின் தலைவராக இந்தியா பொறுப்பேற்றுள்ளது. இந்தோனேசியாவின் பாலி நகரில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில், பிரதமர் மோடியிடம் இந்தோனேசிய அதிபர் பதவியை ஒப்படைத்தார்.

டிசம்பர் முதல் தேதியிலிருந்து இந்தியா முறைப்படி தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டது. இந்த ஜி20 மாநாடு டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.

இதில் அனைத்து மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள், மாநில அரசுகளின் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.

இந்நிலையில், இந்தக் கூட்டத்திற்கு தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி இதற்கான அழைப்பை விடுத்துள்ளார்.