வனவிலங்கு பூங்காவில் உள்ள கரடி உண்மையா? வேடமிட்ட மனிதர்களா?

சீனா: உண்மையான கரடியில்லையா?... வனவிலங்குப் பூங்காவில் உள்ள கரடிகள் உண்மையானவைதானா அல்லது கரடி வேடமிட்ட மனிதர்களே நடமாடுகின்றனரா என்று சர்ச்சை எழுந்துள்ளது.

சீனாவின் கிழக்குப் பிராந்தியத்தில் பிரசித்தி பெற்ற மிருகக்காட்சி பூங்காவில் உள்ள கரடிகள் உண்மையான கரடிகளா அல்லது கரடி வேடமிட்ட மனிதர்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதற்கு விளக்கம் அளித்துள்ள பூங்கா அதிகாரிகள் கரடியே கூறுவது போல சமூக ஊடகங்களில் கரடியின் படத்தைப் போட்டு 'மனிதர்களைப் போல நிற்பதால் நான் வேடமிட்ட மனிதன்தான் என்று சிலர் கருதுகிறார்கள்.

ஆனால் நீங்கள் என்னைப் புரிந்துக் கொள்ளவில்லை' என்று பதிவு ஒன்றை போட்டு உள்ளனர். மலேசியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட சன் கரடிகள் மற்ற கரடிகளைப் போல அல்லாமல் உருவத்தில் சிறியதாகவும் மெலிந்தவையாகவும் பெரிய நாய்கள் உருவத்தில் இருந்ததால் சந்தேகம் எழுந்தது.