பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகைக்கு இது கட்டாயம்


சென்னை: கல்வி உதவித்தொகை பெற ஜாதி சான்றிதழ் கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது ...தமிழக அரசு சார்பில் பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்களின் படிப்பிற்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இந்த உதவித்தொகை ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைகள் சார்பில் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த உதவித்தொகை பெற விருப்பமும் தகுதியுமி ருக்கும் மாணவர்கள், தங்களின் ஜாதி சான்றிதழை பள்ளியில் சமர்ப்பிக்க வேண்டும்.மேலும் அது தவிர குடும்ப வருமான சான்றிதழும் சமர்ப்பிக்க வேண்டும்.

அதன் பின்னர் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். மேலும் மாணவர்களின் வங்கி கணக்கில் பெற்றோர்களின் ஆதார் எண் இணைக்க வேண்டும்.

மேலும் பள்ளிகள் இது பற்றி மாணவர்களுக்கு தகவல் தெரிவித்து, உரிய சான்றிதல்களை மாணவர்களிடம் பெற்று வருகிற நவம்பர் 15 ஆம் தேதிக்குள் எமிஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.