ரேஷன் கடைகளில் வரும் 2024 ஜனவரி மாதம் முதல் புதிய மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளதாக தகவல்

சென்னை: நாடு முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கார்டுகளையும் ஸ்மார்ட் கார்டுகளாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. எனவே இதன் வாயிலாக ரேஷன் அட்டைதாரர்கள் நாடு முழுவதும் எந்த மாநிலத்திலும் தங்களுக்கான ரேஷன் பொருள்கள் தொகுப்பை பெற்றுக் கொள்ள முடியும்.

கடந்த 2016 ஆம் ஆண்டு ரேஷன் அட்டைகளில் கணினி மைய ஒருங்கிணைப்பு பணிகள் தனியார் ஒப்பந்த நிறுவனத்துடன் தொடங்கப்பட்டது. எனவே இதற்கான ஒப்பந்த காலம் 2021 ஆம் ஆண்டு முடிவடைந்த நிலையில், மேலும் 2 ஆண்டுகள் ஒப்பந்த அவகாசம் நீட்டிக்கப்பட்டது.


ஸ்மார்ட் ரேஷன் அட்டைகளில் கருவிழி சரிபார்ப்பு முறையில் பொருள்களை வழங்குவதற்கு 2-ம் கட்ட கணினி மய பதிவுகள் மற்றும் ரேஷன் கடைகளில் பொருட்களுக்கான பில்களை பிரிண்டர் மூலம் வழங்கும் பணிகள் 2024 ஜனவரி மாதம் முதல் துவங்கவுள்ளது.

இதையடுத்து கைரேகை பதிவு முறை காரணமாக பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்கும் நிலையில் கருவிழி பதிவு முறை விரைவில் அமலுக்கு வரவுள்ளது. இதற்கான பணிகள் அனைத்தும் 2024 மார்ச் மாதத்திற்குள் முடிப்பதற்கு அரசு திட்டமிட்டு பணிகளை தீவிரப்படுத்த தொடங்கி உள்ளது.