இம்மாவட்டத்திற்கு ஜனவரி 6 உள்ளூர் விடுமுறை

கடலூர் : உள்ளூர் விடுமுறை ..... உலகப் புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி மாதம் திருமஞ்சன திருவிழா மற்றும் மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசனம் ஆகிய விழாக்கள் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படும் . ஆருத்ரா என்பது திருவாதிரை நட்சத்திரத்தை குறிக்கும். மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரம் அன்று சிவபெருமான் களி உண்ண சென்றதாக கூறப்படுகிறது.

இன்றைய தினமே ஆருத்ரா தரிசன திருவிழா நடைபெறுகிறது. ஆருத்ரா தரிசனம் திருவிழா கடந்த 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் சிதம்பரம் நடராஜர் கோவிலில் வெகு விமர்சையாக தொடங்கியது.தினந்தோறும் இறைவன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தரும் நிலையில் நாளை முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெறுகிறது.

தேரோட்டத்தை முன்னிட்டு தனித்தனி தேர்களில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி அருள் பாலிக்க உள்ளனர்.இந்த விழாவில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.இதனால், கடலூர் மாவட்ட நிர்வாகம் சிதம்பரம் நடராஜர் ஆலய ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு ஜனவரி 6ம் தேதி அந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளது.

இதனால், அன்றைய தினம் பள்ளி, கல்லூரிகள் உட்பட அனைத்தும் மற்றும் அரசு அலுவலங்களும் செயல்படாது. இதையடுத்து இதற்கு பதிலாக ஜனவரி 28ம் தேதி அன்று பணி நாளாக செயல்படும் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.