இரவு நேர ரயில் பயணத்தை எளிதாக்கும் வகையில் முக்கிய விதிமுறைகள்

சென்னை: முக்கிய விதிமுறைகள் .... இந்திய ரயில்வே பயணிகள் வசதியை கருத்தில் கொண்டு பல புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி கொண்டு வருகிறது. ரயில்களில் இரவில் பயணம் செய்வோர் சில பிரச்சனைகளை எதிர்கொள்வதாக ரயில் நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர்.

அதாவது சக பயணிகள் இரவு நேரங்களில் தூங்க விடாமல் அதிக சத்ததுடன் பேசுவது, மொபைலில் பாடல் கேட்பதாகவும் புகார்கள் வந்தது.

இதையடுத்து இது பற்றி ஆய்வு செய்த ரயில்வே நிர்வாகம் புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி இனி ரயில் பயணிகள் இரவு 10 மணிக்கு மேல் மொபைலில் சத்தமாக பேசவோ, பாட்டு கேட்கவோ கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இரவு பயணத்தில் 10 மணிக்கு மேல் அனைத்து விளக்குகளையும் அணைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதை பயணிகள் மீறினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மேலும் அத்துடன் இரவு நேர ரயில் பயணம் தொடர்பாக பயணிகளிடம் இருந்து புகார்கள் வந்தால் ரயில்வே ஊழியர் அதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்றும் ரயில்வே துறை உத்தரவிட்டுள்ளது.