தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை

சென்னை: இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திற்கும் பிரசித்தி பெற்ற பண்டிகைகள் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் கேரள மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தில் வரும் திருவோணம் நட்சத்திரத்தைப் கேரள மக்கள் ஓணம் பண்டிகையாக மிக விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.

எனவே அதன்படி கேரளாவில் இந்த ஆண்டிற்கான ஓணம் பண்டிகை ஆகஸ்ட் 30ம் தேதி முதல் செப்டம்பர் 8ம் தேதி வரை கொண்டாடப்பட இருக்கிறது. அதாவது, ஆண்டுதோறும் இந்த அறுவடை திருவிழாவானது கேரள மாநிலத்தில் மிகுந்த ஆர்வத்துடனும், உற்சாகத்துடனும் கொண்டாடப்படுகிறது.


கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகை இந்த ஆண்டு விமர்சையாக கொண்டாடப்பட இருக்கிறது.ஓணம் பண்டிகை கேரள மக்கள் மட்டுமின்றி மலையாள மொழி பேசும் தென் தமிழக மக்கள் என அனைவரும் கொண்டாடும் பாரம்பரிய பண்டிகையாக உள்ளது.

என்வே இதன் காரணமாக தமிழகத்தில் சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு,ஈரோடு மாவட்டங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு ஓணம் பண்டிகையை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.