தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

சென்னை: வளி மண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 2 நாட்களாகவே தமிழகத்தில் மழை பெய்து கொண்டு வருகிறது. தமிழகத்தில் மட்டுமல்லாமல் அதையொட்டிய பகுதிகளிலும் மழைப்பொழிவு இருந்து கொண்டு வருகிறது.

இதை அடுத்து கேரளாவிலும் தென் மேற்கு பருவமழை மிக தீவிரமடைந்துள்ளதால் அங்கு கனமழை பெய்து வருகிறது. மேலும், தமிழகம், புதுச்சேரி மற்றும் கோவை ஆகிய பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. எனவே அதன்படி நேற்று மட்டுமே தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கனமழை பெய்தது.

மேலும், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் வரும் செப்டம்பர் 4 ஆம் தேதி வரைக்கும் கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மேலும் சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழைப்பொழிவு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா, தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் 50 கிமீ முதல் 60 கிமீ வரைக்கும் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் செப்டம்பர் 4 ஆம் தேதி வரைக்கும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.