வெள்ளை மாளிகைக்கு சென்ற மைக்ரோ சாப்ட், கூகுள் அதிகாரிகள்

வாஷிங்டன்: வெள்ளை மாளிகைக்கு கூகுள் மற்றும் மைக்ரோ சாப்ட் நிறுவன அதிகாரிகள் சென்றனர்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்து ஆலோசிக்க மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை அதிகாரி சத்யா நாதெல்லா மற்றும் கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை உள்ளிட்ட தொழில்நுட்பத்துறையினர் வெள்ளைமாளிகைக்கு சென்றனர்.

அண்மைக்காலங்களில் செயற்கை நுண்ணறிவு மூலமாக அழிவுசக்திகள் தலைதூக்கியிருக்கும் நிலையில் அவற்றை ஒழுங்குமுறைப்படுத்தவும் அரசு அதிகாரத்தில் கட்டுப்படுத்தவும் ஜோ பைடன் நிர்வாகம் தொழில்நுட்பத் துறை வல்லுனர்களை, வெள்ளை மாளிகைக்கு அழைத்து துணை அதிபர் கமலா ஹாரிஸ் தலைமையில் அவசர ஆலோசனை நடத்தியது.