ரேஷன் கடைகளில் பாக்கெட் மூலமாக அரிசி வழங்க திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவிப்பு

சென்னை: ரேஷன் கடைகளில் பாக்கெட் அரிசி ... தமிழகத்தில் ரேஷன் கார்டு தொடர்பாக தொடர்ந்து பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது தமிழக பொது மக்களுக்கு கடந்த 2 ஆண்டுகளில் மட்டுமே 15 லட்சத்திற்கும் அதிகமான ரேஷன் கார்டுதாரர்களுக்கு புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தற்போது முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதாவது, கண் கருவிழி மூலமாக பதிவு செய்து ரேஷன் பொருட்களை பெற்றுக் கொள்ளும் வகையில் நடவடிக்கையை எடுக்கப்பட்டு உள்ளதாகவும், இனி பாக்கெட் மூலமாக அரிசி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

அதிக அளவில் ரேஷன் அரிசி கடத்தப்படுவது தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் வேளையில் பாக்கெட் அரிசி திட்டத்தின் மூலமாக இது போன்ற கடத்தல்கள் தவிர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், ஒரு சில ரேஷன் கடைகளில் குறைவான எடையில் ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது என்று குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இது போன்ற பாக்கெட் அரிசி வழங்குவதால் எடை குறைவு போன்ற எவ்வித குற்றச்சாட்டும் இருக்காது என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.