தமிழகத்தில் சிசேரியன் பிரசவங்கள் உயர்வு அதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் .. அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவிப்பு

சென்னை: தற்போதைய அரசு தமிழகத்தில் மருத்துவ சேவையின் தரத்தை உயர்த்துவதற்கு பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி கொண்டு வருகிறது. மேலும் குழந்தைகளை நோயிலிருந்து காக்க வீடுகளுக்கு அருகாமையில் அங்கன்வாடி மையங்கள் அமைத்து, சத்தான உணவு பொருட்களையும், குழந்தைகளுக்கான தடுப்பூசிகளையும் அளித்து கொண்டு வருகிறது.

மேலும் இதை தவிர வீடு தேடி மருத்துவம், மினி கிளினிக்குகள், தமிழக அரசின் உயர் சிகிச்சை காப்பீட்டு திட்டம் ஆகிய பயனுள்ள திட்டங்கள் மக்களுக்காக செயல்படுத்தி கொண்டு வருகிறது.

எனவே இதன் மூலம் தமிழகத்தில் மருத்துவ சேவையின் தரம் முன்னேறி வருகிறது. மேலும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கர்ப்பிணி பெண்களுக்கு சுகப்பிரசவம் நடைபெற அனைத்து வழிகாட்டுதல்களும் செயல்படுத்தப்பட்டு கொண்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அதிக அளவில் சிசேரியன் பிரசவங்கள் நடைபெறுவதாக ஒன்றிய சுகாதாரத்துறை வெளியிட்ட ஆய்வு முடிவு குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

எனவே இதனையடுத்து சிசேரியன் பிரசவங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அதிலும் குறிப்பாக தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளை விட தனியார் மருத்துவமனைகளிலேயே சிசேரியன் பிரசவங்கள் அதிகம் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.