பொது பாடத்திட்டத்தை மாற்ற உயர்கல்வித்துறைக்கு அதிகாரம் உள்ளது ..அமைச்சர் பொன்முடி விளக்கம்

சென்னை: : சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பொன்முடி, “பொது பாடத்திட்டத்தால் எந்த வித பிரச்சனையும் இல்லை. ஒரு பல்கலைக்கழகத்திலிருந்து மற்றொரு பல்கலைக்கழகத்திற்கு செல்லும்போது பாடத்திட்டத்தில் மாற்றம் இருப்பதாக, மாணவர்கள் கோரிக்கை வைத்த நிலையில் பாடத்திட்டம் மாற்றப்பட்டு உள்ளது.

அனைவரையும் ஆலோசித்தே இம்முடிவு எடுக்கப்பட்டது. பொது பாடத்திட்டத்தை மாற்ற உயர்கல்வித்துறைக்கு அதிகாரம் உள்ளது. இப்பாடத்திட்டம் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பயனளிக்கும். உயர்க்கல்வியின் வளர்ச்சியே எங்களுக்கு நோக்கம். பொது பாடத்திட்டம் குறித்து எடப்பாடி பழனிசாமிக்கு விளக்கம் அளிக்க தயார்.

பொறியியல் முதற்கட்ட கலந்தாய்வில் 22,000 மாணவர்கள் பங்கேற்றனர். இதையடுத்து அதில் 16,516 மாணவர்கள் தேர்வு பெற்றுள்ளனர். 5,497 பேர் கல்லூரிகளில் சேர அனுமதி வாங்கிவிட்டனர். மற்ற மாணவர்கள் அடுத்த சுற்றுக்கு சென்றனர்.

முதல் சுற்று திறந்த சுற்றில் 7,105 மாணவர்கள் இடங்களை தேர்வு செய்து உள்ளனர். சென்னையில் 16 ஆண்டுகளுக்கு பிறகு ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடர் நடைபெறவுள்ளது. இதனை அரசு பள்ளி மாணவர்கள் நேரடியாக இலவசமாக பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது” என அவர் கூறினார்.