டெல்லிக்கு 2 நாட்கள் பயணமாக சென்றுள்ள அமைச்சர் உதயநிதி

சென்னை: இரண்டு நாள் பயணமாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டெல்லி சென்றுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவல்லிக்கேணி – சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் கடந்த டிசம்பர் மாதம் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். அதன்பிறகு, விளையாட்டுத் துறையை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

இந்நிலையில், இரண்டு நாள் பயணமாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டெல்லி சென்றார்.பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இல்ல விழாவில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறார்.

பிரதமர் மோடியை நாளை சந்திக்க உதயநிதி ஸ்டாலின் நேரம் கேட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் மற்றும் கிரிராஜ் சிங் ஆகியோரை சந்தித்து மனு அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது