அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழக பள்ளிக்கல்வித்துறை, சுமார் 7,500 கோடி செலவில் மேம்படுத்தபட்டு வருவதாக தெரிவிப்பு

சென்னை: பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.7,500 கோடி ஒதுக்கீடு .... இன்றைய பள்ளி மாணவர்களின் தரமான கல்வியே அவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என்பதை கருத்தில் கொண்டு தமிழக பள்ளிக்கல்வித்துறை பல முயற்சிகளை எடுத்து கொண்டு

இதனை அடுத்து வருகிறது. தற்போது நடைபெற்று வரும் திமுக தலைமையிலான ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது என இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் முன்னாள் கல்வித்துறை அமைச்சராக இருந்த பேராசிரியர் அன்பழகன் தற்போது 100 வயதை கடந்து விட்டார். கல்வித்துறையில் இவரது பங்கு இன்றியமையாததாகும்.

நடப்பு ஆண்டு இவரின் 101- வது பிறந்த நாளை முன்னிட்டு நூற்றாண்டு விழா நடத்தப்பட்டது. இவ்விழாவில் பங்கேற்று பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தமிழக பள்ளிக்கல்வித்துறை, சுமார் 7,500 கோடி செலவில் மேம்படுத்தபட்டு வருவதாக தெரிவித்தார்.

அதாவது திமுகவினர் ஆட்சிக்கு வந்த பிறகு 7500 கோடி மதிப்பீட்டில் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு எனும் திட்டம் உருவாக்கப்பட்டது.இதையடுத்து இதன் கீழ் உள்ள பணிகள் 5 ஆண்டுக்குள் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து நடப்பு ஆண்டில் அரசு பள்ளிகளில் கட்டுமான பணிகளுக்காக சுமார் ரூ. 1,400 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.