அரசியலுக்கு யார் வந்தாலும் வரவேற்போம் .. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை: சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “இனி திரைப்படத்தில் நடிக்கப் போவதில்லை என்ற முடிவில் எந்த வித மாற்றமில்லை. அரசியலுக்கு யார் வந்தாலும் வரவேற்போம். நடிகர் விஜய் அரசியலுக்கு வரட்டும்.

வந்த பிறகு அது குறித்து பேசுவோம். செந்தில் பாலாஜி விவகாரத்தை சட்டப்படி எதிர்கொள்வோம். புதிய கல்விக் கொள்கை என்பது ஒடுக்கப்பட்டவர்களைக் கல்வியில் இருந்து வெளியேற்றுவதற்கான தெளிவான முயற்சி மற்றும் சதி.


அண்ணா நூற்றாண்டு நூலகம் முதல் வள்ளுவர் சிலை வரை சென்னை முதல் குமரி வரை திமுக அரசின் சாதனை அடையாளங்கள் பரந்து விரிந்து உள்ளன. மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு மாணவரும் தமிழ்நாட்டின் அடையாளமாக திகழ்ந்து பெருமை சேர்க்க வேண்டும். சேப்பாக்கத்திற்கு மட்டுமல்ல தமிழ்நாட்டு மக்களுக்கும் செல்லப்பிள்ளையாகயிருந்து செயல்படுவேன்.

மேலும் எந்த வழியில் இந்தித் திணிப்பை தமிழ்நாட்டுக்குள் கொண்டு வந்தாலும் நாங்கள் சொல்லப்போவது இந்தி தெரியாது போடா என்பதே! பாஜக அரசு பழி வாங்க நினைத்தால்..திமுகவின் போர்க் குணம் வெளிப்படும்” என அவர் கூறினார்.