1முதல் 10 வகுப்பு வரை படிக்கும் சிறுபான்மை பிரிவு மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற, இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்

சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் மற்றும் மைய/மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2022-23 கல்வியாண்டில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் சிறுபான்மை பிரிவு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

மேலும் மத்திய அரசின் www.scholarship.gov.in என்ற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் பிளஸ்1 முதல் ஆராய்ச்சி படிப்பு வரை படிப்பவர்கள், தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான மாணவ, மாணவிகள் பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்துக்கு வருகிற செப்டமர் 30 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை அடுத்து பள்ளி மேற்படிப்பு, தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகைக்கு அக்டோபர் 31 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றி கூடுதல் விவரங்களுக்கு கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 0422-2300404 மற்றும் இ-மெயில் முகவரி dbcwo-tncbe@nic.in வாயிலாக தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.