இலங்கையை காப்பாற்ற தேவையான பணம்..

இலங்கை: இலங்கை பொருளாதாரம் நாளுக்கு நாள் மோசமடைந்து வந்த நிலையில் மக்களின் போராட்டம் மிகப்பெரிய அளவில் வெடித்து, ஜனாதிபதி மாளிகையை மக்கள் கைப்பற்றும் நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது.
இதுமட்டும் அல்லாமல் ஜனாதிபதி மாளிகையில் மக்கள் படுக்கை அறையில் படுப்பது முதல் ஸ்விமிங் பூலில்ல குதித்து விளையாடுவது வரையில் பல சேட்டைகளைச் செய்து வருகின்றனர்.
2023ஆம் ஆண்டு முடியும் வரையில் அந்நாட்டு மக்களுக்குப் போதுமான உணவு பொருட்கள் குறிப்பாக அடிப்படையாகத் தேவைப்படும் உணவு பொருட்கள், எரிபொருள் ஆகியவற்றை வாங்க சுமார் 6 பில்லியன் டாலர் தேவைப்படுகிறது. 6 பில்லியன் டாலர் இருந்தால் மட்டுமே இலங்கை பொருளாதாரத்தை விளிம்பு நிலையில் இருந்து காப்பாற்ற முடியும்.

கடந்த சில மாதத்தில் இந்தியா இலங்கைக்குச் சுமார் 4 பில்லியன் டாலர் அளவிலான தொகையைக் கடனாகவும், பொருளாகவும் அளித்துள்ளது.

இதேவேளையில் இலங்கை அரசு சில கத்தார் அமைப்புகளிடமும் உதவியை நாடியுள்ளார். ஆனால் இந்தக் கடன் இலங்கை பொருளாதாரத்தை மீண்டும் யாரையும் நம்பாமல் இயக்க உதவுமா என்றால் நிச்சயமாக இல்லை, இதனால் பெரும் தொகை ஐபிஎம், உலக வங்கி போன்ற அமைப்புகளிடம் இருந்து இலங்கைக்குத் தற்போது தேவை.