தமிழகத்திலும் பருவமழை தொடங்க ஆரம்பித்துள்ளது .. வெள்ள அபாய முன்னெச்சரிக்கை குறித்து அமைச்சர் விளக்கம்

சென்னை: இந்தியாவில் கடந்த சில மாதங்களாக தென்மேற்கு பருவமழை தொடங்கியதால் பல மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கேரள மாநிலத்தில் இந்த பருவமழை அதிக பாதிப்பை ஏற்படுத்தியது. மேலும் இந்த ஆண்டு பருவமழை கடந்த ஆண்டை காட்டிலும் அதிகளவில் இருக்க கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர் மழையின் காரணமாக அணைகளில் நீர் நிரம்பி வருவதால் ஆற்று ஓரம் தங்கி இருக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதை அடுத்து மேலும் சாலைகளில் மழை நீர் தேங்கி இருப்பதால் மக்கள் வெளியே செல்ல முடியாமல் வீடுகளிலேயே முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது தவிர கடலோர மாவட்டங்களில் உள்ள மீனவர்களை கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கனமழை காரணமாக டெல்டா மாவட்டங்களில் பாதிப்புகள் மிக அதிகளவில் காணப்படுகிறது. இதனால் விளைநிலங்களில் பயிர்கள் மழைநீரால் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றன.

கடந்த ஆண்டு பெய்த கனமழையால் சென்னை மாவட்டம் மழை வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டு அவ்வாறு நடைபெறாமல் இருப்பதாக முன்னெச்சரிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சர் கே.என் நேரு தெரிவித்துள்ளார். இதற்காக ரூ. 935 கோடியில் வெள்ள தடுப்பு பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.