உலகம் முழுவதும் கொரோனாவிலிருந்து 2.10 கோடிக்கும் மேற்பட்டோர் குணம்

சீனாவில் உள்ள வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் முதன் முதலாக கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

இருப்பினும், மருத்துவ துறையினரின் தன்னலமற்ற சேவையால் பலர் குணமடைந்து வருகின்றனர். இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி மீண்டவர்கள் எண்ணிக்கை 2.10 கோடியைக் கடந்துள்ளது. தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2.91 கோடியைத் தாண்டியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 9.27 லட்சத்தைக் கடந்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 60 ஆயிரத்து 800-க்கும் அதிகமானோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. உலகளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. உலகளவில் கொரோனாவிலிருந்து அதிகமாக குணமடைந்தோர் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. ரஷ்யாவில் தற்போது கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. உலகளவில் முதன் முதலில் கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது ரஷ்யாவில் தான்.