தேசிய அரசியலில களமிறங்க பெயர் மாற்றம்... கட்சி பெயர் பாரதிய ராஷ்ட்ரீய சமிதி என அறிவிப்பு

ஐதராபாத்: லோக்சபா தேர்தலில் தேசிய அளவில் போட்டியிடும் நோக்கில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியை 'பாரதிய ராஷ்ட்ரீய சமிதி' எனப் பெயர் மாற்றி அறிவித்துள்ளார் தெலுங்கானா முதல்வர். சந்திரசேகர் ராவ். வெகு எதிர்பார்ப்பில் இந்த அறிவிப்பு இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

2024ம் ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைக்க எதிர்க்கட்சிகள் மாறிமாறி முயற்சித்து வருகின்றன. அந்த வகையில் தெலுங்கானா முதல்வரும், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி தலைவருமான சந்திரசேகர ராவ், எதிர்க்கட்சியினரை அவ்வபோது சந்தித்து வருகிறார்.

பா.ஜ.,வை எதிர்க்க தேசிய அளவில் கூட்டணியை உருவாக்க திட்டமிட்டுள்ள சந்திர சேகர ராவ், இன்று தசராவையொட்டி தனது கட்சி பெயரை 'பாரதிய ரஷ்ட்ரீய சமிதி' என மாற்றியுள்ளார்.


ஐதராபாத்தில் இது தொடர்பாக நடந்த ஆலோசனை கூட்டத்தில் கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி, தமிழகத்தை சேர்ந்த வி.சி.க தலைவர் திருமாவளவன் உட்பட பல மாநிலத்தை சேர்ந்த கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.