நரேந்திரசிங் தோமர் தனது உணர்வுகளை வேளாண் சகோதர சகோதரிகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில் வெளிப்படுத்தியுள்ளார் - பிரதமர் மோடி

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லி மற்றும் டெல்லி எல்லைகளில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் இன்று 24-வது நாளை எட்டியுள்ளது. அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு மாநிலங்களிலும் விவசாய சங்கத்தினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தை அனைத்தும் தோல்வியில் முடிந்த நிலையில் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இந்த போராட்டத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் ஆதரவு அளித்து வருகிறது. இந்நிலையில், வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லை என தொடர்ந்து மத்திய அரசு தெரிவித்து வருகிறது. பிரதமர் மோடியும் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவான கருத்துக்களையே தொடர்ந்து முன்வைத்து வருகிறார்.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் அவ்வப்போது கருத்துக்களையும் பதிவிட்டு வருகிறார். தமிழ், இந்தி, ஆங்கிலம் உள்பட பல்வேறு மொழிகளில் கருத்துக்களை தொடர்ந்து டுவிட்டரில் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில், பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று தமிழில்,
வேளாண் துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர் தனது உணர்வுகளை வேளாண் சகோதர சகோதரிகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில் வெளிப்படுத்தியுள்ளார். இயல்பான பேச்சுவார்த்தைக்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. உழவர் பெருமக்கள் அதைப் படிக்க வேண்டுகிறேன் என பதிவிட்டுள்ளார்.

மேலும் அவர், இந்தத் தகவலை பெருமளவில் பகிர வேண்டும் என பொதுமக்களை கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
வேளாண் துறை அமைச்சர் @nstomer தனது உணர்வுகளை வேளாண் சகோதர சகோதரிகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில் வெளிப்படுத்தியுள்ளார். இயல்பான பேச்சுவார்த்தைக்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. உழவர் பெருமக்கள் அதைப் படிக்க வேண்டுகிறேன்.
— Narendra Modi (@narendramodi) December 19, 2020
இந்தத் தகவலை பெருமளவில் பகிர வேண்டும் என பொதுமக்களை கேட்டுக்கொள்கிறேன்.
— Narendra Modi (@narendramodi) December 19, 2020