ஓடிடி தளங்களுக்காக புதிய நடத்தை விதிகள் வெளியானது

இங்கிலாந்து: இங்கிலாந்தில் புதிய நடத்தை விதிகள் மீறியதற்தாக ஸ்ட்ரீமிங் தளங்கள் விசாரிக்கப்படுவதை உறுதி செய்யும். அதன் பின்னர் சட்டம் அனுமதிக்கும் என்று தெரியவந்துள்ளது.


பிரித்தானியாவின் ராஜ குடும்பத்தை சேர்ந்தவர்கள் இளவரசர் ஹரி-மேகன் தம்பதியினர். இவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு சர்ச்சைக்குரிய ஆவணப்படத்தை வெளியிட்டனர். இதனால் நெட்ஃபிளிக்ஸை ஒழுங்குபடுத்த நாட்டின் ஒளிபரப்பு கண்காணிப்பு அமைப்பான Ofcom எனப்படும் தகவல் தொடர்பு அலுவலகத்தை பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் அங்கீகரித்துள்ளார்.

இது குறித்து அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் ofcom- ன் அதிகார வரம்பில் அனைத்து புதிய ஸ்ட்ரீமிங் தளங்களையும் வைக்கும் புதிய சட்டத்தை நிறைவேற்ற அமைச்சர்கள் திட்டமிட்டுள்ளனர்.


மேலும் OTT தளங்களுக்கு அபராதம் விதிக்கப்படும். இந்நிலையில் பார்வையாளர்கள் அமேசான் பிரைம், நெட்ஃபிக்ஸ், OTT தளங்களில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகள் குறித்து புகார் அளிக்கலாம். இந்நிலையில் புதிய நடத்தை விதிகள் மீறியதற்தாக ஸ்ட்ரீமிங் தளங்கள் விசாரிக்கப்படுவதை உறுதி செய்யும். அதன் பின்னர் சட்டம் அனுமதிக்கும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.