டெங்கு பரிசோதனை முடிவுகளுக்கு புதிய கட்டுப்பாடு

சென்னை: டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதால், பரிசோதனை முடிவுகளை 6 மணி நேரத்தில் அளிக்க வேண்டும் என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல் ...தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் தற்போது வேகமாக பரவி கொண்டு வருகிறது எனவே இதனை தடுக்க அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து கொண்டு வருகிறது. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் டெங்கு காய்ச்சலுக்கு தனி வார்டுகள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தின் பொது சுகாதார இயக்குனர் செல்வ விநாயகம் அவர்கள் தற்போது அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். எனவே அதன்படி தமிழகத்தில் அடுத்த மூன்று மாதத்திற்கு டெங்கு பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.மேலும் அது மட்டுமல்லாமல் இந்த பாதிப்புகள் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள மாவட்டங்களில் அதிகரிக்கும். எனவே அதனை கண்டறிய ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளதாகவும், அவர் தெரிவித்து உள்ளார்.


டெங்கு காய்ச்சல் குறித்த பரிசோதனை முடிவுகளை 6 மணி நேரத்தில் வழங்க அரசு மற்றும் தனியார் ஆய்வுகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 2 நாட்களில் தஞ்சை மற்றும் கும்பகோணம் ஆகிய பகுதிகளில் 13 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் டெங்குடன் 51 மருத்துவமனை சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து டெங்கு பாதிப்பு உயர்ந்து வருவதை ஒட்டி பல்வேறு தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளில் அரசு பல்வேறு முகாம்களை நடத்தி வருகிறது. இப்பரிசோதனை முடிவுகளை விரைவில் வழங்க 1830 ஆரம்ப சுகாதார நிலையங்கள் கிராமப்புற சுகாதார நிலையங்களை ஒருங்கிணைத்து பரிசோதனை கருவிகளை அரசு வழங்கி உள்ளது. 23 ஆயிரம் மருத்துவ பணியாளர்கள் இந்த டெங்கு தடுப்பு சிறப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அரசு தெரிவித்து உள்ளது.