உருமாற்றம் அடைந்த வைரஸ் குறித்து கவலைப்பட வேண்டிய அவசியமில்லை - மத்திய சுகாதாரத்துறை

சீனாவில் கடந்த ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இருப்பினும் தற்போது கொரோனாவுக்கு எதிராக தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டதால் உலக மக்கள் சற்று நிம்மதி அடைந்தனர்.

இந்நிலையில் இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்துள்ளது. இது வேகமாக பரவ கூடியதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த உருமாற்ற கொரோனா வைரஸ் அதற்குள் தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் உருமாறி புதுவகை கொரோனா வைரஸாக உருவெடுத்துள்ளது. இது ஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவி வருகிறது.

தற்போது இந்த புதுவகை கொரோனா வைரஸ் இந்தியாவிலும் கால் எடுத்து வைத்துள்ளது. இது மிகவும் வேகமாக பரவும் தன்மை கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அச்சப்படுகிறார்கள். ஆனால், ஏற்கனவே கண்டுபிடித்த கொரோனா வைரஸ் தடுப்பூசி இந்த வைரசுக்கும் எதிராக வேலை செய்யும் எனக் கூறப்படுகிறது. இருந்தாலும் மக்களிடம் ஒருவகை அச்சம் நிலவுகிறது.

இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தியில், இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் தடுப்பூசி உருமாற்றம் அடைந்த வைரசுக்கு எதிராக நிச்சயம் வேலை செய்யும். எனவே அது குறித்து கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. ஆந்திரா, குஜராத், பஞ்சாப், அசாம் மாநிங்களில் கொரோனா தடுப்பூசி திட்ட ஒத்திகை வெற்றி பெற்றுள்ளது. கொரோனா தடுப்பூசி குறித்து விரைவில் நல்ல செய்தி வெளியாகும் எனத்தெரிவித்துள்ளது.