மீண்டும் ஏவுகணையை ஏவிய வடகொரியா... ஜப்பான் எச்சரிக்கை

ஜப்பான்: மீண்டும் ஏவுகணையை ஏவிய வடகொரியா… ஜப்பானின் பிரத்தியேக பொருளாதார வலய கடற்பகுதியில் வட கொரியா, கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணையொன்றை ஏவியுள்ளதாக ஜப்பானிய அரசாங்கம் தெரவித்துள்ளது.

இந்த ஏவுகணை கிழக்கு நோக்கி ஏவப்பட்டதாகவும் 66 நிமிடங்கள் அது பறந்ததாகவும் ஜப்பானிய அரசாங்கத்தின் பிரதம பேச்சாளர் ஹிரோகஸு மட்சுனோ தெரிவித்துள்ளார்.

அதிகபட்சமாக 5,700 கிலோமீட்டர் உயரத்துக்கு அது சென்றதாகவும் அவர் கூறியுள்ளார். 'வட கொரியாவின் இத்தகைய தொடர் நடவடிக்கைகள் ஜப்பான் மற்றும் சர்வதேச சமூகத்தின் சமாதானத்துக்கும் ஸ்திரத்தன்மைக்கும் அச்சுறுத்தலாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்கா, தென் கொரியா உட்பட சர்வதேச சமூகத்துடன் ஒருங்கிணைந்து செயற்படுவதன் மூலம் இதற்கு ஜப்பான் பதிலளிக்கும்' எனவும் கூறியுள்ளார்.