வடகொரியாவின் முதல் உளவு செயற்கை கோளை விண்ணில் செலுத்த உத்தரவு

வடகொரியா: அதிபர் உத்தரவு... வடகொரியாவின் முதல் உளவு செயற்கைக்கோளை திட்டமிட்டப்படி விண்ணில் செலுத்த அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளார்.

அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்காக, நாட்டின் உளவுத் திறனை மேம்படுத்தும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது.

மேலும், பியாங்யாங்கில் உள்ள விண்வெளி மையத்திற்கு தனது மகளுடன் சென்ற அதிபர் கிம் ஜாங் உன், அதிகாரிகளை சந்தித்து பேசிய புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளது.

வடகொரியா கடந்த டிசம்பர் மாதம் உளவு செயற்கைக்கோளுக்கான இறுதிக்கட்ட சோதனையை நடத்தியது குறிப்பிடத்தக்கது.