துணை மருத்துவ பயிற்சிகளுக்கான சேர்க்கை குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது

தமிழம்: கதமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படாத நிலையில் சென்ற கல்வியாண்டில் கொரோனா பரவல் சற்று குறைந்ததை அடுத்து பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டது. திட்டமிட்டபடி 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடந்து முடிந்த நிலையில் நேற்று அவர்களுக்கு முடிவுகள் வெளியானது. அதன் பின் மாணவர்கள் உயர் படிப்பிற்கு என்ன படிக்கலாம் என்ற குழப்ப நிலையில் இருந்து வருகிறார்கள்..

இந்நிலையில் 12 ஆம் வகுப்பு முடித்துவிட்டு துணை மருத்துவ பயிற்சியில் பயில விருப்பமுள்ளவர்களுக்கு தற்போது புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது.

மேலும் இந்த படிப்புகளுக்கு 12 ஆம் வகுப்பில் எந்த பிரிவு எடுத்து படித்திருக்க வேண்டும் என்பது குறித்தும் விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சியில் சேர வயது வரம்பாக 30.07.2022 அன்று வயது 22 க்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு விதிகளின் படி தாழ்த்தப்பட்ட , மலைசாதியினர் , பிற்படுத்தப்பட்ட , மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உரிய வயது வரம்பு தளர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்றுக்கு மேற்பட்ட பாடப்பிரிவுகளுக்கும் ஒரே விண்ணப்பம் போதுமானதாகும் . மேற்படிப்பிற்கான வழிகாட்டுதல் ஆலோசனை கட்டணமின்றி இலவசமாக வழங்கப்படும் எனவும், கலந்துரை ஆலோசனை மூலம் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு தகுந்த கல்லூரிகளில் நிபந்தனையுடன் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் tnedusupport.in என்ற இணைய தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் எனவும் இதற்கான கடைசி நாள் 15.8.2022 என தெரிவிக்கப்பட்டுள்ளது.