பள்ளிகள் திறப்பு தேதி குறித்த அறிவிப்பு

சென்னை: 2022 – 2023ம் கல்வி ஆண்டில் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளிகள் அனைத்தும் வழக்கம் போல் செயல்படத் தொடங்கியுள்ளது. கல்வி ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்ட நிலையில், பாடங்களை தவிர மாணவர்களுக்கு அடிப்படை அறிவை வளர்க்க அரசு பல முயற்சிகளையும் எடுத்து வந்தது.

முன்னதாக செப்டம்பர் மாதம் நடந்த காலாண்டு தேர்விற்காக அக்டோபர் மாத தொடக்கத்தில் மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.அதன்பின்னர், 2ம் பருவத்திற்கான பாடங்கள் நடத்தி முடிக்கப்பட்டது.

இதையடுத்து டிசம்பர் மாத தொடக்கத்தில் இருந்து அரையாண்டு , 2ம் பருவ இறுதி தேர்வுகள் நடத்தப்பட்டு, டிசம்பர் 24ம் தேதியான இன்று முதல் மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தற்போது தமிழக மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

எனவே அதன்படி, தமிழக பாட திட்டத்தில் செயல்படும் தனியார் பள்ளிகளுக்கு டிசம்பர் 24 முதல் ஜனவரி 1ம் தேதி வரை விடுமுறை எனவும், ஜனவரி 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.