ஒக்டேன் 92 ரக பெட்ரோல் இன்று முதல் விலை உயர்வு

கொழும்பு: பெட்ரோல் விலை உயர்வு... ஒக்டேன் 92 ரக பெட்ரோலின் விலை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்டருக்கு 30 ரூபாயினால் அதிகரிக்கப்படவுள்ளதாக சிபெட்கோ அறிவித்துள்ளது.

இதற்கமைய, புதிய விலை 400 ரூபாய் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

அதேபோன்று லங்கா ஐ.ஓ.சி நிறுவனமும் ஒக்டேன் 92 ரக பெட்ரோலின் விலையினை 30 ரூபாயினால் அதிகரிக்க தீர்மானித்துள்ளது.

ஒக்டேன் 92 ரக பெட்ரோலின் விலை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்டருக்கு 30 ரூபாயினால் அதிகரிக்கப்படவுள்ளதாக சிபெட்கோ அறிவித்துள்ளது.