தமிழ்நாட்டில் அக். 1 முதல் இதுவரை வடகிழக்கு பருவமழை 2% கூடுதலாக பொழிவு

சென்னை: வடகிழக்கு பருவமழை 2% கூடுதலாக பொழிவு .... அதிகபட்சமாக ஈரோடு மாவட்டத்தில் 61% கூடுதலாக வடகிழக்கு பருவமழை பெய்துள்ளது. ஈரோடு மாவட்டத்தை அடுத்து அதிகபட்சமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் 55 மி.மீ. அளவுக்கு பருவமழை பொழிவு, நாமக்கல் 42%, கோவை 41%, குமாி 39%,

இதனை அடுத்து கிரிஷ்ணகிாி 34%, திருப்பூர் 26%, திருவள்ளூர் 17%, இயல்பை விட கூடுதலாக மழை பெய்துள்ளது. காஞ்சி 39%, திண்டுக்கல் 19%, மதுரை 17%, சென்னை 16%, தருமபுாி 13%, ராணிப்பேட்டை 11%, தி.மலை 10%, சேலம் 8% மழை பெய்துள்ளது.

வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், கண்ணன்கோட்டை போன்ற 5ஏரிகள் முழுமையாக நிரம்பும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்தாண்டை காட்டிலும் இந்தாண்டு அனைத்து ஏரிகளிலும் ஒட்டுமொத்தமாக 2டிஎம்சி நீர் குறைவாகவே உள்ளது.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர் இருப்பு 70.71%உள்ளது. கடந்தாண்டு இதே நாளில் 87.2% நீர்இருப்பு இருந்த நிலையில் இந்தாண்டு 1.9டிஎம்சி நீர் குறைவாக உள்ளது.எனினும் கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என அதிகாரிகள் அவர்கள் தெரிவித்துள்ள்ளனர்.