டெல்லி போல் பிற மாநிலங்களிலும் அவசர சட்டம் அமலாகும்... முதல்வர் கெஜ்ரிவால் விமர்சனம்

புதுடில்லி: முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் எச்சரிக்கை... டெல்லியில் அமல்படுத்தப்பட்ட அவசர சட்டம் இப்போதே தடுத்து நிறுத்தப்படாவிட்டால் விரைவில் பிற மாநிலங்களிலும் அமல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

குடிமைப் பணி அதிகாரிகள் நியமனம் தொடர்பாக துணைநிலை ஆளுநருக்கும் டெல்லி அரசுக்கும் மோதல் நீடித்து வந்த நிலையில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு அரசுக்கு சாதகமாக இருந்தது.

இதனையடுத்து மத்திய அரசு அவசர சட்டம் ஒன்றை பிறப்பித்து அதிகாரத்தை தக்க வைத்துக் கொண்டது. மத்திய அரசின் அவசர சட்டத்திற்கு எதிராக டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் பிரமாண்டமான பேரணி நடத்தப்பட்டது.

பொதுக்கூட்டத்தில் முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில், மாநில அரசின் உரிமைகளைப் பறிக்க இந்த அவசர சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறினார். பிரதமர் மோடியின் அரசு உச்சநீதிமன்றத் தீர்ப்பை நிராகரித்து விட்டதாகவும் கெஜ்ரிவால் விமர்சனம் செய்தார்