ஆப்கன் அகதிகளை கைது செய்து முகாம்களில் அடைக்கின்றனர் பாகிஸ்தான் போலீசார்

பாகிஸ்தான்: ஆஃப்கான் அகதிகளை கைது செய்து முகாம்களில் பாகிஸ்தான் போலீசார் அடைத்து வருகின்றனர். இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனங்கள் எழுப்பி வருகின்றனர்.

பாகிஸ்தானில் சட்டவிரோதமாக தங்கிவரும் ஆஃப்கானியர்கள் அக்டோபர் மாத இறுதிக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டிருந்த நிலையில், வெளியேறாதவர்களை போலீசார் கொத்துகொத்தாக கைது செய்து முகாம்களில் அடைத்து வருகின்றனர். இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்து வருகின்றனர்.

ஆஃப்கான் அகதிகள் 17 லட்சம் பேர் பாகிஸ்தானில் வசித்துவந்த நிலையில், இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் ஆஃப்கானுக்கு திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது.

இரு நாடுகளையும் இணைக்கும் டோர்கம் எல்லைச்சாவடியில் 7 கிலோமீட்டர் தொலைவிற்கு ஆஃப்கான் அகதிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.