காலியாக இருக்கும் ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக பணியிடங்களை நிரப்ப .. நாடாளுமன்ற நிலைக்குழு உத்தரவு

சென்னை: நாடு முழுவதும் கொரோனா பரவலின் காரணமாக 2 ஆண்டுகளாக ஆசிரியர் பணியிடங்கள் எதுவும் நிரப்பப்படாமல் காலியாக இருந்து கொண்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 11ம் தேதி நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்ற நிலையில் கல்வி, மகளிர், இளைஞர் மற்றும் விளையாட்டு துறையின் சார்பில் பல்வேறு அறிக்கைகள் வெளியிடப்பட்டு உள்ளது.

அந்த வகையில், கடந்த 2022-23 ஆம் நிதி ஆண்டில் நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் 9,86,585 பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து இவற்றில் 7,47,563 காலிப்பணியிடங்கள் துவக்க பள்ளியிலும், 1,46,334 பணியிடங்கள் உயர்நிலைப் பள்ளிகளிலும், 92,666 பணியிடங்கள் மேல்நிலைப் பள்ளிகளிலும் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படி பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் இல்லாமல் இருப்பதால் மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி கொண்டு வருகின்றனர்.

மேலும், 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்கிற மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையின் படி உடனடியாக அரசு பள்ளிகளில் உள்ள அனைத்து பணியிடங்களும் நிரப்பப்பட்டிருக்க வேண்டும் என்று நாடாளுமன்ற நிலைக்குழு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது.