இரண்டாவது ஊரடங்கால் பொருட்கள் வாங்க கடைகளில் குவிந்த மக்கள்

பொருட்கள் வாங்க கடைகளில் குவிந்த மக்கள்... பிரித்தானியாவில் இரண்டாவது ஊரடங்கு விதிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் மக்கள் பொருட்கள் வாங்க கடைகளில் குவிந்துள்ளனர்.

இன்று காலை Costco-வில் பொருட்கள் வாங்க மக்கள் முகக் கவசம் அணிந்த படி வரிசையில் நிற்கும் படங்கள் வெளியாகியுள்ளது. அடுத்த வாரம் பிரித்தானியாவில் இரண்டாவது முழு ஊரடங்கு அமல்படுத்த உள்ள நிலையில் பலர் பால் மற்றும் டாய்லெட் பேப்பர் ரோல் ஏற்றப்பட்ட தள்ளுவண்டிகளுடன் கடையிலிருந்து வெளியே வரும் படங்களும் வெளியாகியுள்ளது.

இதன் மூலம் பிரித்தானியாவில் மீண்டும் பொருட்கள் வாங்க மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

விஞ்ஞான ஆலோசகர்கள் இரண்டாவது அலை குறித்து தரவுகளை அரசாங்கத்திற்கு வழங்கியதை அடுத்து, புதன்கிழமைக்குள் பிரித்தானியாவில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என நம்பப்படுகிறது.

அத்தியாவசிய கடைகள் மற்றும் கல்வி அமைப்புகளைத் தவிர அனைத்தும் மூடப்படுவது உட்பட பல கட்டுப்பாடுகள் புதன்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டு டிசம்பர் 1 வரை நீடிக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.