தியேட்டர்களுக்கு செல்லும் மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும்

சென்னை: புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு... தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் தியேட்டர்களுக்கு சுகாதாரத்துறை புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு உலக நாடுகளை கடும் பாதிப்புக்குள்ளாக்கியது கொரோனா தொற்று. இதனால் பல்வேறு உலக நாடுகலும் கடுமையாக பாதிக்கப்பட்டு முழு ஊரடங்கை அமல்படுத்தப்பட்டது இதனால் மக்கள் வீடுகளில் முடங்கினர்.

இதையடுத்து நாட்டையே கடுமையாக பாதிப்புக்குள்ளாக்கிய கொரோனா நோய் தொற்று குறைந்த நிலையில் உலக நாடுகள் இயல்பு நிலைக்கு திரும்பி வந்து கொண்டு இருக்கின்றன.

இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்படுமா? என்ற அச்சமும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் சற்று அதிகரிக்க தொடங்கியுள்ளதால் மருத்துவமனைகளுக்கு செல்லும் போது முககவசம் கட்டாயம் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்தார்.

இந்த நிலையில் மக்கள் அதிகம் கூடும் இடமான சினிமா தியேட்டர்களில் மக்கள் முகக்கவசம் அணிவது அவசியம் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறுகையில், தமிழகத்தில் கொரோனா பரவல் மிதமாகவே உள்ளதால் அதிரடி கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்க வேண்டிய அவசியமில்லை.

எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகக்கவசம் அணிவதை மட்டும் சில இடங்களில் கட்டாயமாக்கி வருகிறோம். முதலில் மருத்துவமனைகளில் மாஸ்க் கட்டாயமாக்கப்பட்ட நிலையில், தற்போது தியேட்டர்கள், ஏசி வசதி உள்ள அரங்குகள், கலையரங்கம் ஆகியவற்றில் மாஸ்க் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது என அவர் கூறினார்.