அரசாங்கத்தின் மீத மக்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போய்விடும்... டி.டி.வி. தினகரன் எச்சரிக்கை

சென்னை: மக்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் மேல, அரசாங்கத்தின் மேல நம்பிக்கை இல்லாமல் போய்டும். தயவு செய்து முதலமைச்சர் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியதாவது: மக்களுக்கு ஜனநாயகத்தின் மேலேயும், அரசாங்கத்தின் மேலயும் நம்பிக்கை இல்லாமல் போய்விடும். குறிப்பா தேர்தல் வாக்குறுதியில் சொல்லிட்டு, அதை செய்யாமல் இப்படி காலம் கடத்துவது… 20 மாதங்கள் ஆகியும், எதிர்க்கட்சித் தலைவரா இருந்த போது ஆசிரியர்களுக்கு ஆதரவு சொல்லிட்டு, இப்படி எல்லாம் செயல்படுவது எல்லா அரசியல்வாதிகளுக்கும் தலைகுனிவை கொடுக்கும்.

மக்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் மேல, அரசாங்கத்தின் மேல நம்பிக்கை இல்லாமல் போய்டும். தயவு செய்து முதலமைச்சர் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் கொடுத்து இருக்கின்ற அதிகாரம் 5 வருஷம் என்பதனால், ஆட்சியில் வந்துட்டு, எல்லாத்தையும் மூட்டை கட்டி போயிறலாம்னு நினைக்குறாங்களா ? அதுக்கப்புறம் தமிழ்நாட்டில் தான இருக்கனும் அவங்க. இது ரொம்ப விசித்திரமாக இருக்கிறது. வேதனையாக இருக்கிறது.

இதை நான் எதோ எதிர் கட்சியை சேர்ந்தவன், ஆளுங்கட்சி மேல ஏதோ ஒரு பொறாமையில் சொல்லல. தமிழ்நாட்டு மக்கள் வாக்களித்து ஆட்சி பொறுப்பை கொடுத்திருக்காங்க. இதைக் கூட செய்யலைன்னா திராவிட மாடல் என்று இனிமேல் சொன்னீர்கள் என்றால் ? மக்கள் வெகுண்டெழுந்து உங்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று தான் நினைக்கிறேன். உண்மையாவே ரொம்ப வருத்தமாக இருக்கிறது என தெரிவித்தார்.